நடிகர் அர்ஜுன் தமிழ், கன்னடம், தெலுங்கு என பல மொழிகளில் பாப்புலரான நடிகராக இருந்து வருகிறார். அவருக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா என இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.
மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றது. அவர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
திருமண வீடியோ மற்றும் புகைப்படங்களும் இணையத்தில் பெரிய அளவில் வைரல் ஆகி இருந்தது.
இரண்டாம் மகள் காதலர் இவரா?
அர்ஜுனின் இரண்டாம் மகள் அஞ்சனா தற்போது குடும்பத்துடன் இருக்கும் சில போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் அவர் உடன் புது நபர் ஒருவரும் இருக்கிறார். அவர் தான் உங்க காதலரா என நெட்டிசன்கள் தற்போது கேட்டு வருகின்றனர்.