தற்போது மலையாள சினிமாவை புரட்டி போட்டிருக்கிறது ஹேமா கமிட்டி ரிப்போர்ட். நடிகைகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாவதாக அதில் குறிப்பிடப்பட்டு இருந்த விஷயங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தற்போது பல நடிகைகள் தைரியமாக பாலியல் புகார் அளித்து இருப்பதால் பல முன்னணி பிரபலங்கள் சர்ச்சையில் சிக்கி இருக்கின்றனர்.
ஜீவா வாக்குவாதம்
நடிகர் ஜிவா தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர். அவர் இன்று தேனியில் ஒரு துணிக்கடை திறக்க வந்திருந்தார்.
அவரிடம் செய்தியாளர்கள் நடிகைகள் பாலியல் சர்ச்சை பற்றி கேள்வி எழுப்பினார்கள்.
“நல்ல விஷயத்திற்கு வந்திருக்கிறேன், இப்படி அபசகுனமா கேக்குறீங்க” என சொல்லி ஜீவா கோபப்பட்டு இருக்கிறார்.
மேலும் இது வாக்குவாதமாக மாறி ஜீவா ஒரு செய்தியாளரை ‘அறிவு இருக்கா’ என சொல்லி திட்டும் அளவுக்கு சென்று இருக்கிறது.
இந்த வீடியோ வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.