புஷ்பா 2
அல்லு அர்ஜுன்-ராஷ்மிகா நடிப்பில் கடந்த கடந்த 2021ம் ஆண்டு வெளியான படம் புஷ்பா.
சுகுமார் இயக்கத்தில் தயாரான இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட், பட கதை, பாடல்கள், பஞ்ச் வசனங்கள், காதல் காட்சி என படத்தில் அனைத்துமே ஹைலைட்டாக பார்க்கப்பட்டது.
முதல் பாக வெற்றியை தொடர்ந்து கடந்த டிசம்பர் 5ம் தேதி 2ம் பாகம் வெளியானது. படம் வெளியான 6 நாட்களில் ரூ. 1000 கோடி வசூலை எட்டிவிட்டது. தற்போது வரை படம் ரூ. 1,409 கோடி வரை வசூல் செய்துள்ளது.
ஓடிடி ரிலீஸ்
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வந்துள்ளது. அதாவது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.