சிறகடிக்க ஆசை
விஜய் டிவிக்கு இப்போது டிஆர்பியில் டாப்பில் கொண்டு வந்து பெருமை சேர்த்து வருகிறது சிறகடிக்க ஆசை சீரியல்.
இன்றைய எபிசோட் கதையில் முத்து, மீனா மீதுள்ள அதே கோபத்துடன் சவாரிக்கு செல்கிறார். அப்போது ஒரு பெண்மணி தனது அம்மா வீட்டிற்கும், புகுந்த வீட்டிற்குள் இடையில் மாட்டிக்கொண்டு எவ்வளவு பிரச்சனைகளை சமாளிக்கிறார் என்று கூறி அழுகிறார்.
அதைக்கேட்டவுடன் முத்து மனம் அப்படியே மாறுகிறது, மீனா குறித்து யோசிக்கிறார். இன்னொரு பக்கம் கிரிஷை பள்ளியில் சேர்க்க ஒரு விளம்பரம் அவருக்கு கிடைக்கிறது.
புரொமோ
எபிசோடில் முடிவில் மிகவும் செமயான காட்சியின் புரொமோ வெளியாகியுள்ளது.
அதில் முத்து-மீனாவிடம் தான் கோபப்பட்டதற்கு மன்னிப்பு கேட்டு வாங்கிவந்த அல்வாவை கொடுக்கிறார், முத்து பேசியதை கேட்டு மீனா அப்படியே சந்தோஷப்படுகிறார்.
பின் முத்து மீண்டும் குடித்துவிட்டு வந்த மீனாவிடம் சண்டை போட்டது பார்த்து சந்தோஷத்தில் அல்வா சாப்பிட ஆசையாக இருப்பதாக கூறிய விஜயாவிடம் தனது கணவர் வாங்கிக்கொண்டு வந்த அல்வாவை கொடுத்து செம பதிலடி கொடுக்கிறார் மீனா.
இந்த செம சீனை காண ரசிகர்களும் ஆவலாக உள்ளனர்.