Monday, February 17, 2025
Homeசினிமாஅவருடன் நெருக்கமாக இருக்கக்கூடாது.. த்ரிஷா வெளியிட்ட அதிர்ச்சி பதிவு

அவருடன் நெருக்கமாக இருக்கக்கூடாது.. த்ரிஷா வெளியிட்ட அதிர்ச்சி பதிவு


த்ரிஷா

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் த்ரிஷா. இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி, தக் லைஃப் என வரிசையாக பல படங்கள் வெளியாக உள்ளன.

தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகிலும் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டு முன்னணி நடிகையாக பயணித்து கொண்டிருக்கிறார்.

அதிர்ச்சி பதிவு

இந்நிலையில், த்ரிஷா அவரது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்திருந்த ஒரு போஸ்ட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அவருடன் நெருக்கமாக இருக்கக்கூடாது.. த்ரிஷா வெளியிட்ட அதிர்ச்சி பதிவு | Trisha Instagram Post Goes Viral

அதில், ” உன்னை மனமுடைய செய்தவரிடம் நெருக்கமாக, நட்புடன் பழகும் ஒருவருடன் எந்தக் காலத்திலும் நாம் பழகக்கூடாது” என்று இருக்கும் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

இதை கண்டு ரசிகர்கள் த்ரிஷா யாரை குறிப்பிட்டு இது போன்ற ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் என கேள்வி கேட்க தொடங்கி விட்டனர். இதோ அந்த பதிவு,

    



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments