ப்ரீத்தி முகுந்தன்
இயக்குனர் இளன் இயக்கத்தில், நடிகர் கவின் நடிப்பில் வெளிவந்த ஸ்டார் படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் ப்ரீத்தி முகுந்தன்.
மேலும் இவர், சமீபத்தில் வெளிவந்த Aasa Kooda என்ற ஆல்பம் பாடலில் நடனமாடி இளைஞர்கள் மனதை கொள்ளையடித்துவிட்டார்.
ஓபன் டாக்
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை ப்ரீத்தி முகுந்தன் பல சுவராசியமான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், தமிழில் இரண்டு படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மற்ற மொழிகளிலும் பட வாய்ப்புகள் வந்துகொண்டு இருக்கிறது. ஆனால் இப்போது என்னால் அதை பற்றி பேசமுடியாது. விரைவில் அது தொடர்பான அறிவிப்புகளை வெளியிடுவேன். எனக்கு இயக்குனர் பா ரஞ்சித் படங்களில் நடிக்க ஆசை என்று ப்ரீத்தி முகுந்தன்.