Wednesday, March 26, 2025
Homeசினிமாஆட்டோ ஓட்டுனரால் வாழ்க்கை மாறியது.. நடிகர் மணிகண்டன் உடைத்த ரகசியம்

ஆட்டோ ஓட்டுனரால் வாழ்க்கை மாறியது.. நடிகர் மணிகண்டன் உடைத்த ரகசியம்


மணிகண்டன் 

ஜெய் பீம் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் மணிகண்டன். இதை தொடர்ந்து குட் நைட் படத்தில் ஹீரோவாக நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தார்.

அதன் பின், லவ்வர் திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் முக்கிய ஹீரோக்களில் ஒருவராக மாறியுள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான குடும்பஸ்தன் படமும் மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது.

உடைத்த ரகசியம் 

இந்நிலையில், சமீபத்தில் மணிகண்டன் ஊடகம் ஒன்றில் பேசிய விஷயம் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், “ஒரு சமயம் அதிகமான மன உளைச்சலில் ஷேர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்த போது அந்த ஆட்டோ ஓட்டுனர் என்னிடம், அவரது வாழ்க்கை குறித்து பேசினார்.

அதாவது, அவரது குடும்பம் சொந்த ஊரில் இருப்பதாகவும், இந்த ஆட்டோ ஊட்டுவது அவருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்றும் எனக்கு ஊரில் நிலம் உள்ளது.

ஆட்டோ ஓட்டுனரால் வாழ்க்கை மாறியது.. நடிகர் மணிகண்டன் உடைத்த ரகசியம் | Manikandan About His Life Experience

விவசாயம் செய்ய நல்ல மோட்டார் வாங்க வேண்டும் என்பதற்காக தான் ஆட்டோ ஓட்டுவதாகவும் சொன்னார். அதை கேட்ட உடன் ஒரு நம்பிக்கை வந்தது. திரும்பி எழுந்து ஓட வேண்டும் என்று” என கூறியுள்ளார்.      

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments