ஆந்திரா-தெலுங்கானா
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரளா, வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள்.
இதனால் உலகம் முழுவதும் உள்ள மக்கள், சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள் என அனைவரும் வயநாடு மக்களுக்காக பண உதவி செய்து வந்தார்கள்.
வயநாடு மெல்ல மெல்ல பழைய நிலைமைக்கு மாறிவரும் நிலையில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர்.
சிம்பு உதவி
ஆந்திரா-தெலுங்கானா மக்களுக்கு உதவ பொது நிவாரண நிதிக்கு தெலுங்கு திரைப் பிரபலங்கள் நிதி வழங்கி வருகின்றனர்.
தெலுங்கு சினிமா பிரபலங்கள் அனைவரும் நிதிஉதவி செய்துவரும் நிலையில் நடிகர் சிம்பு ஆந்திரா-தெலுங்கானா மக்களுக்காக ரூ. 6 லட்சம் நிதி உதவி செய்துள்ளார்.
தெலுங்கு மக்களுக்காக முதலில் உதவி செய்துள்ள தமிழ் சினிமா நடிகர் சிம்பு தான்.