Sunday, December 8, 2024
Homeசினிமாஆனந்த் அம்பானி திருமணத்திற்கு பாலிவுட் பிரபலங்கள் கொடுத்த விலையுயர்ந்த பரிசுகள்.. முழு விவரம்

ஆனந்த் அம்பானி திருமணத்திற்கு பாலிவுட் பிரபலங்கள் கொடுத்த விலையுயர்ந்த பரிசுகள்.. முழு விவரம்


ஆனந்த்-ராதிகா

இந்த வருடம் ஆரம்பமான நாள் முதல் இந்தியாவின் பணக்கார குடும்பமான அம்பானி வீட்டில் ஒரே கொண்டாட்டம் தான்.

காரணம் அவரது இளைய மகன் ஆனந்த் திருமண ஏற்பாடுகள் கோலாகலமாக நடந்தது. ஆனந்தின் நீண்டநாள் தோழியான ராதிகாவுடன் தான் திருமணம் நடந்தது. படு கோலாகலமாக கடந்த ஜுலை 12ம் தேதி இவர்களின் திருமணம் நடந்தது.

திருமணத்தில் கலந்துகொண்ட மாப்பிள்ளைக்கு நெருங்கிய பிரபலங்களுக்கு ரூ. 2 கோடி மதிப்பிலான வாட்ச் பரிசாக வழங்கப்பட்டது.

இவர்களது திருமணத்திற்கு வந்த சினிமா பிரபலங்கள் புதிய ஜோடிக்கு வழங்கியுள்ள பரிசுகள் பற்றிய விவரம் வெளியாகியுள்ளது.

என்னென்ன பரிசு

பாலிவுட்டின் டாப் நாயகன் ஷாருக்கான் ரூ. 40 கோடி மதிப்புள்ள அபார்ட்மெண்ட் ஒன்றை பரிசாக வழங்கியதாக கூறப்படுகிறது. அமிதாப் பச்சன் குடும்பம் ரூ. 30 கோடி மதிப்புள்ள மரகத நெக்லஸ் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளனராம்.

ஆனந்த் அம்பானி திருமணத்திற்கு பாலிவுட் பிரபலங்கள் கொடுத்த விலையுயர்ந்த பரிசுகள்.. முழு விவரம் | Celebrities Gift To Anant Ambani Marriage

சல்மான் கான் ரூ. 15 கோடி மதிப்புள்ள சொகுசு பைக், தீபிகா-ரன்வீர் இணைந்து ரூ. 20 கோடி மதிப்புள்ள ஒரு ரோல்ஸ் ராயஸ் கார் ஒன்றை வழங்கியுள்ளார்களாம்.

அதேபோல் நடிகர் அக்ஷய் குமார் ரூ. 60 லட்சம் மதிப்புள்ள காஸ்ட்லி தங்க பேனாவை வழங்கியுள்ளாராம்.

ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் ஜோடி இணைந்து ரூ. 9 கோடி மதிப்புள்ள மெர்சிடஸ் கார் ஒன்றை பரிசாக வழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனந்த் அம்பானி திருமணத்திற்கு பாலிவுட் பிரபலங்கள் கொடுத்த விலையுயர்ந்த பரிசுகள்.. முழு விவரம் | Celebrities Gift To Anant Ambani Marriage

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments