அஞ்சனா
தொகுப்பாளினி அஞ்சனா, தமிழ் சின்னத்திரை ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு பிரபலம்.
சன் மியூசிக் தொலைக்காட்சியில் தனது தொகுப்பாளர் வேலையை தொடங்கியவர் தொடர்ந்து செய்து வருகிறார். இடையில் கயல் சந்திரனை காதலித்து திருமணம் செய்துகொண்டவருக்கு ஒரு மகனும் உள்ளார்.
அஞ்சனா தொகுப்பாளினி வேலையை தாண்டி அதிகம் போட்டோ ஷுட் நடத்துவதில் அக்கறை காட்டி வந்தார். அவர் வெளியிடும் புகைப்படங்களும் ரசிகர்களிடம் நன்கு வைரலாகி வந்தது.
ஆபரேஷன்
இந்த நிலையில் திடீரென மருத்துவமனையில் கையில் மாவு கட்டுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அவர் வீட்டில் தவறி விழுந்ததில் பிரச்சனையாகியுள்ளது.
நேற்று புகைப்படம் வெளியிட்டவர் இன்று மருத்துவமனையில் ஆபரேஷனுக்கு செல்லும் முன் எடுத்த வீடியோவை பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் நீங்கள் கண்டிப்பாக சரியாகிவிடுவீர்கள் என ஆறுதல் கமெண்ட் செய்து வருகிறார்கள்.