எதிர்நீச்சல்
விறுவிறுப்பின் உச்சமாக ஒரு காலத்தில் ஓடிய தொடர் தான் எதிர்நீச்சல். பெண் அடிமை, ஆணாதிக்கம் போன்ற விஷயங்களால் இப்போதும் அடிமைப்படுத்தப்படும் பெண்களின் உண்மை நிலையை காட்டும் ஒரு தொடராக அமைந்தது.
மாரிமுத்து அவர்கள் குணசேகரன் கதாபாத்திரத்தின் மூலம் பெரிய ரீச் பெற்றார், ஆனால் அவரது இறப்பு எதிர்நீச்சல் டிஆர்பிக்கு பெரிய இழப்பாக அமைந்தது. வேலராம மூர்த்தி நன்றாக நடித்தாலும் மாரிமுத்துவை ரசிகர்கள் மிஸ் செய்தார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன் எதிர்நீச்சல் சீரியல் முடிவுக்கு வருவதாக செய்தி வர தற்போது இந்த வாரத்துடன் முடிவுக்கும் வந்துவிட்டது.
இன்றைய புரொமோ
இன்றைய எபிசோட் புரொமோவில், அப்பத்தா காட்டிய ஆதாரத்தால் ஆயுள் தண்டனை பெற்ற குணசேகரன் தனது தம்பிகளை கட்டியணைத்து அழுகிறார். அதோடு தண்டனை பெற்றும் திருந்தாமல் இவளுங்ககிட்ட நான் தோற்றுவிட்டேன் என முறைத்தபடி பார்க்கிறார்.
மேலும் பெண்களை பார்த்து நக்கலாக பேசுகிறார்.
இதோ எதிர்நீச்சல் சீரியலின் புரொமோ,