Sunday, November 3, 2024
Homeசினிமாஆரம்பமாகும் புதிய அத்தியாயம்.. சரிகமப லிட்டில் சாம்ஸ் 4 தொடங்கும் தேதி

ஆரம்பமாகும் புதிய அத்தியாயம்.. சரிகமப லிட்டில் சாம்ஸ் 4 தொடங்கும் தேதி


தமிழ் சின்னத்திரையின் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்று ஜீ தமிழ். விதவிதமான ரியாலிட்டி ஷோக்கள், வித்தியாசமான கதைக்களம் கொண்ட சீரியல்களை ஒளிபரப்பி தொடர்ந்து மக்களை கவர்ந்து வருகிறது.

உலகம் முழுவதும் பிரபலமடைந்த சரிகமப நிகழ்ச்சியின் நான்காவது சீசன் சமீபத்தில் மிக பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக மகிழன் தேர்வு செய்யப்பட்டார். மேலும் வடசென்னையை ஸ்வேதா இரண்டாவது இடத்தையும் விழுப்புரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவரான வீரபாண்டி மூன்றாம் இடத்தையும் பெற்றார்.


சீனியர்களுக்கான சரிகமப சீசன் 4 முடிவுக்கு வந்ததை தொடர்ந்து வரும் நவம்பர் இரண்டாம் தேதி முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பங்குபெறும் சரிகமப லிட்டில் சாம்ஸ் சீசன் 4 தொடங்க உள்ளது.


இந்த நிகழ்ச்சியையும் அர்ச்சனா தொகுத்து வழங்க உள்ளார். நடுவர்களாக ஸ்ரீநிவாஸ், ஸ்வேதா, எஸ்பிபி சரண் மற்றும் சைந்தவி ஆகியோர் பங்கு பெற உள்ளனர். வரும் நவம்பர் இரண்டாம் தேதி இந்த நிகழ்ச்சிக்கான மெகா ஆடிஷன் ஒளிபரப்பாக உள்ளது. இதில் சிறப்பு நடுவராக வைக்கம் விஜயலட்சுமி பங்கேற்க உள்ளார் .


வரும் நவம்பர் இரண்டாம் தேதி முதல் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 7 மணிக்கு நம்ம வீட்டு இளஞ்சிட்டுகளின் இன்னிசை குரலை கேட்டு மெய்சிலிர்க்க தயாராகுங்கள்.  

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments