ஆர்ஆர்ஆர் படம்
பிரம்மிப்பின் உச்சத்தில் நிறைய படங்கள் எடுத்து பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் எப்படி அசத்துகிறாரோ அவரைப் போலவே இன்னொரு இயக்குனரும் உள்ளார்.
அவர் தான் தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர் ராஜமௌலி. ஈ, பாகுபலி போன்ற படங்கள் எல்லாம் அவர் எப்படிபட்ட இயக்குனர் என்பதை காட்டும்.
கடந்த 2022ம் ஆண்டு இவரது இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது.
ரூ. 550 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படத்தில் ராம் சரண், ஜுனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன் என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்தார்கள்.
யார் அவர்
அல்லுரி வெங்கடராம ராஜுவாக அஜய் தேவ்கன் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரத்திற்காக அஜய் தேவ்கன் ரூ. 35 கோடி சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது.
அஜய் தேவ்கன் ஒரு நிமிடத்திற்கு ரூ. 4.35 கோடி என 8 நிமிட வேடத்தில் நடித்ததற்காக ரூ. 35 கோடி சம்பளமாக பெற்றிருக்கிறார்.