தங்கலான்
இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் தங்கலான். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும், இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்த படம் வருகிற 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது.
சென்னையில், கடந்த 5ம் தேதி இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த படத்தின் புரோமோசனுக்காக படக்குழு வெவ்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர். அவ்வாறு புரோமோசனுக்காக செல்லும்போது அங்கு உள்ள ரசிகர்களை சந்தித்து படம் பற்றி பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து வருகின்றனர்.
ஆஸ்கார்
இதைதொடர்ந்து, சமீபத்தில் இந்த படத்தின் புரோமோசன் கோவையில் நடைபெற்றது. அங்கு படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர், அப்போது தங்கலான் படம் ஆஸ்கருக்குச் செல்லுமா? என்ற கேட்கப்பட்ட கேள்விக்கு தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான தனஞ்செயன் பதிலளித்தார்.
அவர் கூறுகையில் நிச்சயம் படத்தை ஆஸ்கருக்கு கொண்டு செல்லும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டு வருகிரும் என்றும், படம் கட்டாயாம் ஆஸ்கருக்கு பரிந்துரைப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்றும், கூறியுள்ளார். மேலும், இந்த படம் இந்திய சினிமாவிற்கு பெருமையைத் தேடித்தரும் எனவும் கூறினார்.