இயக்குனர் சிபி சக்கரவர்த்தி
அட்லீ இயக்கத்தில் வெளிவந்த தெறி மற்றும் மெர்சல் படங்களுக்கு உதவியாளராகப் பணியாற்றியவர் சிபி சக்கரவர்த்தி.
பிறகு, நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து டான் படத்தை இயக்கினார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
டான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமடைந்த சிபி சக்கரவர்த்தி சாப்ட்வேர் என்ஜினியராக பணிபுரியும் ஸ்ரீ வர்ஷினி என்பவருடன் கடந்த 5 – ம் தேதி ஈரோட்டில் திருமணம் செய்து கொண்டார்.
பத்திரிகையாளர் சந்திப்பு
இந்த நிலையில், இன்று இந்த ஜோடி பத்திரிகையாளர்களை சந்தித்து உரையாடினர். அப்போது பேசிய சிபி, டான் படத்திற்கு பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இதுபோன்று நான் இயக்கும் அனைத்து படங்களுக்கும் உங்கள் ஆதரவு மிகவும் முக்கியம்.
மேலும், எனது திருமணம் ஈரோட்டில் நடந்ததால் என்னால் அனைவரையும் அழைக்க முடியவில்லை அதற்காக தான் இந்த சந்திப்பு என்று கூறியுள்ளார்.
சிவகார்த்திகேயன் மற்றும் சிபி கூட்டணி மீண்டும் இணையும் என கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.