Tuesday, February 18, 2025
Homeசினிமாஇதனால் தான் மூக்குத்தி அம்மன் 2 நான் இயக்கல.. போட்டுடைத்த RJ பாலாஜி

இதனால் தான் மூக்குத்தி அம்மன் 2 நான் இயக்கல.. போட்டுடைத்த RJ பாலாஜி


RJ பாலாஜி இயக்கி நடித்த படம் மூக்குத்தி அம்மன். அதில் நயன்தாரா தான் மூக்குத்தி அம்மன் ரோலில் நடித்து இருந்தார்.

அந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து ஹிட் ஆன நிலையில், சமீபத்தில் அதன் இரண்டாம் பாகம் தொடங்கப்படுவதாக அறிவிப்பு வந்திருந்தது. ஆனால் அதை இயக்கப்போவது சுந்தர் சி என தெரிவிக்கப்பட்டது.

RJ பாலாஜி பேட்டி

இந்நிலையில் RJ பாலாஜி சமீபத்திய பேட்டியில் தான் மூக்குத்தி அம்மன் 2 படம் இயக்காதது ஏன் என்கிற காரணத்தை கூறி இருக்கிறார்.

“நான் மூக்குத்தி அம்மன் 2 இயக்க interested ஆக இல்லை. அவங்க அதை பண்ற ஐடியால இருந்தாங்க, எனக்கு அந்த ஐடியா இல்லை. அதனால் வேறு இயக்குனரை வெச்சி பண்றாங்க.”

“மூக்குத்தி அம்மன் இல்லை என்றால் நான் வேறு எதாவது படம் பண்ணிக்குறேன். அது ஒன்னும் டைட்டானிக் இல்லை. மூக்குத்தி அம்மன் இல்லைனா மாசாணி அம்மன். அதுவும் இல்லனா இன்னும் 108 அம்மன் பெயர்கள் இருக்கு. அதில் ஒன்றை இயக்குவேன்” என RJ பாலாஜி கூறி இருக்கிறார்.

“நான் சில படங்களில் நடித்து கொண்டிருக்கிறேன். அதே நேரத்தில் நான் எழுதிய கதை மூலமாக சூர்யா சாரை இயக்கும் வாய்ப்பும் கிடைத்து இருக்கிறது” எனவும் அவர் கூறி இருக்கிறார். 

இதனால் தான் மூக்குத்தி அம்மன் 2 நான் இயக்கல.. போட்டுடைத்த RJ பாலாஜி | Rj Balaji Reason Not Directing Mookuthi Amman 2

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments