சாய் பல்லவி
மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருந்து தமிழ் சினிமாவில் புகழ் பெற்றவர் சாய் பல்லவி. ‘பிரேமம்’ என்ற மலையாள திரைப்படத்தில் நடித்தன் மூலம் திரையுலகில் பிரபலமான இவர் ‘தியா’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதை தொடர்ந்து, தமிழில் பல வெற்றி படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சம்பாதித்தார்.
தற்போது, இவர் சிவகார்த்திகேயன் ஜோடியாக அமரன் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் அக்டோபர் 31, அதாவது தீபாவளி பண்டிகை அன்று ரிலீஸ் ஆகா உள்ளது.
உணர்ச்சிவசப்பட்டு பேசிய சாய் பல்லவி
இதன் காரணமாக தொடர்ந்து படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு கலந்து கொண்டு வருகின்றனர், அந்த வகையில், தற்போது பேட்டி ஒன்றில் சாய் பல்லவி கலந்து கொண்டு பேசியுள்ளார்.
அதில், “நான் அமரன் படத்தின் கதையை படித்தபோது இந்தக் கதாபாத்திரத்தை சரியாக திரையில் கொண்டுவர என்னால் முடியுமா என்ற சந்தேகம் எனக்குள் இருந்தது.
இயக்குனர் ராஜ்குமார் இந்த கதை குறித்து என்னிடம் பேசும்போதும் நான் பல கேள்விகளை கேட்டு விளக்கிக்கொண்டேன்.
இது போன்ற உண்மை கதையை வைத்து எடுக்கப்படும் கதாபாத்திரத்தில் நான் நடிப்பதற்கு கண்டிப்பாக நான் ஆசீர்வதிக்கப்பட்டிருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.