நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்
மலையாள சினிமாவில் பெண்களுக்கு எதிராக நடக்கும் விஷயங்கள் குறித்து ஹேமா கமிட்டி மூலம் வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கும் நிலையில் இதுபோன்று தமிழ் சினிமாவிலும், தெலுங்கு சினிமாவிலும் கமிட்டி அமைக்க வேண்டும் என்று பல முன்னணி நடிகைகள் கேட்டுக்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் கிண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு செய்தியாளர்களிடம் பேசினார்.
ஹேமா கமிட்டி குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ்
அப்போது தமிழ் சினிமாவிலும் ஹேமா கமிட்டி போன்ற ஒரு கமிட்டி அமைத்து விசாரிக்க வேண்டும் என்று பலர் கோரிக்கை வைத்து வருகின்றனர். அதுகுறித்து உங்கள் கருத்து என்ன என்று ஐஸ்வர்யாவிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஐஸ்வர்யா, தமிழ் சினிமாவில் பெண்களுக்கு எதிராக இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை. நான் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் நடித்துள்ளேன். ஆனால், இதுவரை எனக்கு இதுபோன்ற ஒரு செயல் நடக்கவில்லை.
அதனால் ஹேமா கமிட்டி போன்ற ஒரு கமிட்டி தமிழ் சினிமாவிற்கு தேவை இல்லை.
ஒரு வேளை பெண்களுக்கு எதிராக தவறு நடந்தால் கண்டிப்பாக சம்மந்தப்பட்டவர்கள் தண்டிக்க பட வேண்டும் என்று கூறியுள்ளார்.