விஜய் – திரிஷா
தமிழ் திரையுலகில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த திரை ஜோடி விஜய் – திரிஷா. இவர்கள் இருவரும் கடைசியாக லியோ படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.
இது இவர்கள் இருவரும் இணைந்து ஐந்தாவது முறையாகும். இதற்குமுன் கில்லி, திருப்பாச்சி, ஆதி மற்றும் குருவி ஆகிய படங்களில் இணைந்து நடித்திருந்தனர்.
மேலும் தற்போது GOAT படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா நடித்துள்ளார்.
ஆம், கதாநாயகியாக இல்லாமல், ஒரே ஒரு பாடலில் நடிகர் விஜய்யுடன் இணைந்து நடிகை திரிஷா நடனமாடியுள்ளார். விரைவில் இந்த பாடல் வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
அன்ஸீன் புகைப்படம்
இந்த நிலையில், விஜய் மற்றும் த்ரிஷா இருவருடைய அன்ஸீன் புகைப்படம் ஒன்று இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்கள் இவர்கள் இருவருடன் தெலுங்கு நடிகர் பவர் ஸ்டார் பவன் கல்யாணும் இருக்கிறார்.
இந்த புகைப்படம் பவன் கல்யாண் நடித்து வெளிவந்த பங்காரம் படத்தின் துவக்க விழாவில் எடுத்தது என கூறப்படுகிறது. இதோ அந்த புகைப்படம்..