வேட்டையன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரஜினிகாந்த் நடிப்பில் மாஸாக வெளிவர உள்ள படம் வேட்டையன். TJ ஞானவேல் இயக்கத்தில் ரூ. 160 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் வரும் அக்டோபர் 10 – ம் தேதி வெளிவர உள்ளது.
இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், பகத் பாசில், மஞ்சு வாரியர் என பல பிரபலங்கள் நடித்துள்ளார்கள். அதனால் இந்த படத்தின் மேல் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல், ரஜினி மற்றும் அமிதாப் பச்சன் இருவரும் இணைந்து 34 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தில் இணைந்துள்ளனர். அதோடு அமிதாப் பச்சன் நேரடியாக நடிக்கும் முதல் தமிழ் திரைப்படமாக வேட்டையன் அமைந்துள்ளது.
ப்ரீ புக்கிங்
நாளுக்கு நாள் வேட்டையன் படத்தின் மேல் உள்ள எதிர்ப்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், ப்ரீ புக்கிங்கில் வேட்டையன் படம் மாஸ் காட்டி வருகிறது.
அதன்படி, இதுவரை படத்திற்கான ப்ரீ புக்கிங் கலெக்ஷன் மட்டுமே ரூ. 8.2 கோடிக்கு மேல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.