ராஷ்மிகா மந்தனா
தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழில் சுல்தான், வாரிசு போன்ற படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தவர்.
அதைத்தொடர்ந்து, தனுஷுடன் இணைந்து குபேரா என்ற படத்தில் நடித்து கொண்டு வருகிறார்.
அது மட்டும் இல்லாமல் இவர் நடிப்பில் வெளியான புஷ்பா படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படம் இவருடைய சினிமா வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பு முனையாக அமைந்தது. அதற்கு பின் இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தன.
வைரல்
இந்த நிலையில், ராஷ்மிகா அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் உணவு, சிரிப்பு, தூக்கம், பயணம்,நல்ல புத்தகம்,காபி மற்றும் அவர் நாய் குட்டி என எல்லாவற்றையும் பதிவு செய்து இவை அனைத்தும் என் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியம் என பதிவிட்டுள்ளார்.
அது மட்டும் இன்றி இவை அனைத்தையும் தனி தனியாக பதிவிட்டு அதற்கு ஏற்ப விளக்கம் கொடுத்துள்ளார்.
மேலும், இவை அனைத்தும் தான் என் வாழ்க்கையில் எனக்கு மகிழ்ச்சி தரும் விஷயங்கள் எனவும், குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் வலைத்தளங்களில் வைரல் ஆகி ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.