சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பல மாஸ் படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
த.செ.ஞானவேல் இயக்கத்தில், லைகா நிறுவனம் தயாரிப்பில்
தற்போது தனது 170 – வது படமான வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த படம் வரும் அக்டோபர் 10 -ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகவுள்ள நிலையில், வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
இதில், ரஜினிகாந்த் தன்னுடன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பாலிவுட் முன்னணி நடிகரான அமிதாப் பச்சன் குறித்து புகழ்ந்து பேசியிருப்பார்.
ரஜினிகாந்தை பாராட்டிய அமிதாப் பச்சன்
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாத அமிதாப் பச்சன், ரஜினிகாந்தை பாராட்டி வீடியோ செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், ” ரஜினி ‘ஹம்’ என்ற படத்தில் என் தம்பியாக நடித்திருப்பார். அப்போது செட்டின் தரையில் மட்டுமே படுத்துக் கொள்வார். அந்த அளவிற்கு ஒரு எளிமையான மனிதர். இந்த குணத்திற்காக தான், இன்றும் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து கொண்டு இருக்கிறார் ரஜினிகாந்த்” என்று அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
The Big B is here! 😎🤘🏽 @SrBachchan #Vettaiyan #VettaiyanAudioLaunch #VettaiyanTheHunter pic.twitter.com/hOfPsSWlXH
— Sony Music South India (@SonyMusicSouth) September 20, 2024