விஜய்
விஜய் இன்று இந்திய சினிமாவின் டாப் 5 நடிகர்களில் ஒருவராக இருப்பவர்.
இவர் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போதே தீவிர அரசியலில் இறங்கி விட்டார். எப்படியும் 2026 அரசியலில் மிகப்பெரும் வெற்றியை பெற வேண்டும் என போராடி வருகிறார்.
விஜய்யின் 69வது படமே அவரின் கடைசி படம் என அவர் தெரிவித்து விட்டார். அண்மையில் ஒரு விழாவில் கலந்துகொண்ட விஜய் முழு அரசியல்வாதியாக மாறியிருப்பது அவரின் பேச்சு மூலம் நன்றாகவே தெரிகிறது.
நிறைவேறா ஆசை
இந்நிலையில் விஜய் இத்தனை வருட சினிமா வாழ்க்கையில் அவருக்கு ஒரே ஒரு ஆசை மட்டும் நடக்கவில்லையாம்.
அது என்னவென்றால் 20 வருடங்களுக்கு முன் தன் நண்பர் ஒருவரிடம் விஜய் தனக்கு படம் இயக்க வேண்டும் என்று ஆசை, கண்டிப்பாக எதிர்காலத்தில் செய்வேன் என்று கூறியுள்ளார்.
ஆனால், கடைசி வரை அது நடக்காமல் போக, தற்போது சினிமாவில் இருந்து விலக இனி அவர் படமும் இயக்கப்போவதில்லை, அவரின் இந்த ஆசை கடைசி வரை கனவாகவே உள்ளது.