இந்தியன் 2
2024ஆம் ஆண்டு பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் இந்தியன் 2. இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்துள்ளார்.
முதல் பாகம் 1996ஆம் ஆண்டு வெளிவந்த நிலையில், 28 ஆண்டுகள் கழித்து இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளார். இதுமட்டுமின்றி இந்தியன் 2 அடுத்த வருடம் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளனர்.
இப்படத்தில் கமலுடன் இணைந்து சித்தார்த், பிரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால், விவேக், பாபி சிம்ஹா, ஜெகன் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் விமர்சனம்
இந்த நிலையில், இந்தியன் 2 திரைப்படத்தை பார்த்துவிட்டு சென்சார் போர்டு நபர்கள் கமல் ஹாசனிடம் தங்களது கருதுவக்களை தெரிவிக்கும் பொழுது ‘படம் நன்றாக இருகிறது’ என தங்களத விமர்சனத்தை கூறினார்களாம்.
இதனை இன்று நடைபெற்ற ப்ரீ மீட்டில் வெளிப்படையாக கமல் ஹாசன் கூறியுள்ளார்.
மேலும் சென்சார் போர்டை சேர்ந்தவர்கள் படம் நன்றாக இருக்கிறது என்று சொல்வது மிகவும் அரிது என்றும் இது போன்ற பல படங்களுக்கு அவர் சொல்ல வேண்டும் என கமல் ஹாசன் கூறினார்.