இந்தியன் 2
கமல் ஹாசன் – ஷங்கர் கூட்டணியில் 1996ஆம் ஆண்டு வெளிவந்த பிரமாண்ட திரைப்படம் இந்தியன். லஞ்சத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட இப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்றது.
இதன்பின் 28 ஆண்டுகள் கழித்து இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவரவுள்ளது. லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் கமலுடன் இணைந்து சித்தார்த், சமுத்திரக்கனி, ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திலிருந்து சமீபத்தில் தான் ட்ரைலர் வெளிவந்து ரசிகர்கள் இடையே சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பையும் உண்டாக்கியுள்ளது.
முதலில் நடிக்கவிருந்த நடிகர்
இந்த நிலையில், இப்படத்தில் சித்தார்த் நடித்துள்ள கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது சிவகார்த்திகேயன் தானாம். கால்ஷீட் இல்லாத காரணத்தினால் தான் இந்தியன் 2 திரைப்படத்தில் சிவகார்த்திகேயனால் நடிக்க முடியாமல் போய்விட்டது என கூறப்படுகிறது.