இந்தியன் 2
90ஸ் ஹிட்ஸ்களின் பேவரைட் படங்களில் ஒன்றாக இருக்கிறது இந்தியன் திரைப்படம். முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் 2019 -ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சில காரணங்களால் படத்தின் ஷூட்டிங் தாமதம் ஆகி தற்போது படம் வெளியாக இருக்கிறது.
இப்படத்தில் சித்தார்த், ராகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா,விவேக் எஸ் ஜே சூர்யா எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இந்தியன் 2 வருகிற ஜூலை மாதம் 12 தேதி வெளியாகவுள்ளதால் இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சம்பளம்
இந்நிலையில் இந்தியன் 2 படத்தில் நடிக்க கமல் ஹாசனுக்கு ரூ 150 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.