Sunday, September 8, 2024
Homeசினிமாஇந்தியன் 2 படத்தை நிராகரித்த டாப் ஹீரோ.. யார் தெரியுமா

இந்தியன் 2 படத்தை நிராகரித்த டாப் ஹீரோ.. யார் தெரியுமா


இந்தியன் 2

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களுள் ஒருவர் கமல் ஹாசன். இவர் கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற படத்தில் நடித்தார். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மெகா ஹிட்டானதை தொடர்ந்து இந்தியன்- 2 படத்தில் நடித்தார்.

  


இந்த படத்தில் கமலுடன் சேர்ந்து சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இந்தியன் படத்தின் முதல் பாகம் மெகா ஹிட் ஆனதை தொடர்ந்து இரண்டாம் பாகத்தின் மீதும் ரசிகர்களுக்கு உச்சக்கட்ட எதிர்பார்ப்பு இருந்தது.

அதைத்தொடர்ந்து, கடந்த ஜூலை 12ஆம் தேதி இந்தியன்- 2 படம் ரிலீஸானது. இந்த படத்திற்கு நெகட்டிவ்வான விமர்சனங்களே பெரும்பாலும் கிடைத்தது. மேலும், இந்தப் படத்தை எடுக்காமலேயே இருந்திருக்கலாம் எனவும் ரசிகர்கள் ஓபனாக பேச ஆரம்பித்தனர்.

இந்தியன் 2 படத்தை நிராகரித்த டாப் ஹீரோ.. யார் தெரியுமா | Sivakarthikeyan Is The First Choice For Indian 2



இதை தொடர்ந்து, இந்த படம் சில நாட்களுக்கு முன்பு நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இப்படம் வெளியான பிறகு பல ட்ரோல்களை சந்தித்தது. இதனால் படக்குழு உச்சக்கட்ட அப்செட்டில் இருந்தனர். இந்தியன்- 2 படத்தின் தோல்வியை மனதில் வைத்து இந்தியன் 3யை இன்னும் சிறப்பாக கொடுக்க ஷங்கர் பணிகளை ஆரம்பித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

சிவகார்த்திகேயன் நடிக்கவிருந்த ரோல்



இந்த நிலையில்,ஓடிடியில் இந்தியன்-2 படம் வெளியாதை தொடர்ந்து, நெட்டிசன்கள் சித்தார்த்தையும் ட்ரோல் செய்ய தொடங்கி விட்டனர். முக்கியமாக படத்தில் அவர் பேசும், சித்ரா அரவிந்தன் சோஷியல் மீடியா, GO Back Indian ஆகிய வசனங்களில் அவர் பேசும் காட்சிகளை மட்டும் வெட்டி எடுத்து சித்தார்த்தை ட்ரோல் செய்து வருகின்றனர்.

இந்தியன் 2 படத்தை நிராகரித்த டாப் ஹீரோ.. யார் தெரியுமா | Sivakarthikeyan Is The First Choice For Indian 2



இந்நிலையில், சிவகார்த்திகேயன் தான் முதலில் சித்தார்த் ரோலில் நடிக்கவிருந்தாராம். ஆனால் அந்த சமயத்தில் அவர் கைவசம் இரண்டு படங்கள் இருந்ததால் அவர் நடிக்க மறுத்துவிட்டார் என கூறப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments