மகாராஜா
சமீபத்தில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படம் மகாராஜா. விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்திருந்த இப்படத்தை நித்திலன் இயக்கியிருந்தார். மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று இப்படம் வெற்றியடைந்தது.
உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனையும் படைத்தது மகாராஜா. விஜய் சேதுபதியின் கெரியர் பெஸ்ட் படமாக மாறியுள்ள மகாராஜா படம் தற்போது இந்தியில் ரீமேக் ஆகவுள்ளது.
மகாராஜா இந்தி ரீமேக்
ஆம், பாலிவுட் சினிமாவில் ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் ஆமிர் கான். இந்தியாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவரான இவர் தான் தற்போது மகாராஜா படத்தின் இந்தி ரீமேக் உரிமையை வாங்கியுள்ளாராம்.
இந்தியில் உருவாகவிருக்கும் மகாராஜா படத்தில் ஆமிர் கான் ஹீரோவாக நடிக்கிறார் என தகவல் வெளிவந்த நிலையில் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆனால், இயக்குனர் யார் என்று தெரியவில்லை. மேலும் மகாராஜா இந்தியில் ரீமேக் ஆகப்போகிறது என்பது குறித்து இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை.