சினிமா துறையில் டாப் ஹீரோக்கள் சம்பளம் நாளுக்கு நாள் புது உச்சத்தை தொட்டு வருகிறது. அதற்கு அவர்கள் கட்டும் வரியும் மிகப்பெரிய அளவில் இருக்கிறது.
வாங்கும் சம்பளத்திற்கு சரியாக வரி கட்டும் நடிகர்களில் விஜய்யும் ஒருவர். சில வருடங்களுக்கு முன்பு விஜய் வீட்டில் ஐடி ரெய்டு நடந்தபோது விஜய் சரியாக அனைத்து கணக்குகளை வைத்து இருப்பதையும், சரியாக வரி கட்டி இருப்பதையும் உறுதி செய்தனர்.
இந்திய அளவில் அதிகம் வரி கட்டும் நடிகர்கள்
தற்போது இந்திய அளவில் அதிகம் வரி கட்டும் நடிகர்கள் லிஸ்ட் வெளியாகி இருக்கிறது. அதில் தளபதி விஜய் இரண்டாம் இடம் பிடித்து இருக்கிறார். முதல் இடத்தில் ஷாருக் கான் இருக்கிறார்.
2024 வருடத்தில் ஷாருக் கான் 92 கோடி ரூபாய் வரி கட்டி இருக்கிறார், விஜய் 80 கோடி கட்டி இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.
சல்மான் கான் 75 கோடி செலுத்தி மூன்றாம் இடத்திலும், அமிதாப் பச்சன் 71 கோடி செலுத்தி நான்காம் இடத்திலும் இருக்கின்றனர்.