அஜித்-விஜய்
அஜித்-விஜய் தமிழ் சினிமா வியந்து பார்க்கும் பிரபலங்கள்.
ஆரம்பத்தில் எவ்வளவோ கஷ்டங்களை சந்தித்தாலும் தங்களது விடாமுயற்சியால், கடின உழைப்பால் இன்று இந்திய சினிமா கொண்டாடும் பிரபலங்களாக வளர்ந்து இருக்கிறார்.
விஜய் சினிமாவில் என்ட்ரி கொடுக்க அவரது அப்பா இருந்தாலும் தற்போது தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியிருக்கிறார்.
அதேபோல் அஜித் எந்த ஒரு பின்னணியும் இல்லை என்றாலும் தனது கடின உழைப்பின் மூலம் வளர்ந்து கோடான கோடி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார்.
விஜய் தனது கடைசி படமான 69வது பட வேலைகளில் இருக்க அஜித் நடிப்பில் அடுத்து விடாமுயற்சி படம் வெளியாக இருக்கிறது.
அன்ஸீன் வீடியோ
இவர்கள் இருவரும் தங்களது சினிமா பயணத்தின் ஆரம்பத்தில் ஒரு படத்தில் இணைந்து நடித்துள்ளனர். ஆனால் இப்போது இவர்கள் ஒன்றாக நடிக்க வேண்டும் என்றால் அது சாத்தியம் இல்லை என்பது அனைவருக்குமே தெரியும்.
இந்த நிலையில் பல வருடங்களுக்கு முன் 100 வருட இந்திய சினிமா என்ற நிகழ்ச்சி படு பிரம்மாண்டமாக நடந்தது.
அந்த நிகழ்ச்சியின் போது விஜய் மற்றும் அஜித் இருவரும் ஒன்றாக நின்று கொண்டிருக்கும் இதுவரை நாம் பார்த்திராத ஒரு குட்டி வீடியோ சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. இதோ பாருங்கள்,