Wednesday, March 26, 2025
Homeஇலங்கைஇந்திய மீனவர்கள் 17 பேருக்கு சிறைத் தண்டனை – Oruvan.com

இந்திய மீனவர்கள் 17 பேருக்கு சிறைத் தண்டனை – Oruvan.com


இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 17 பேருக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையும் மேலும் ஒரு மீனவருக்கு இரண்டரை இலட்சம் ரூபா தண்டப் பணமும் விதித்து விடுதலை செய்யுமாறு மன்னார் நீதவான் நேற்று (7) மாலை தீர்பளித்துள்ளார்.

அதே நேரம் நபர் ஒருவர் அனுமதி பத்திரம் இன்றி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் இரண்டாவது தடவையாக
ஈடுபட்டமை கண்டறியப்பட்ட நிலையில் குறித்த நபருக்கு ஒரு வருட சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கடந்த 23.02.2025 தலைமன்னார் கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட 32 மீனவர்களில் நான்கு மீனவர்கள் முதல் குற்றத்துக்காக 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையுடன் நபருக்கு தலா இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வீதம் தண்டப்பணம் விதிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டதுடன் ஏனைய மீனவர்களை எதிர்வரும் 14ம் திகதி வரை விளக்கமறியல் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

கடந்த 02.02.2025 கைதுசெய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களில் 9 பேர் முதல் குற்றத்துக்காக 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையுடன் நபருக்கு தலா இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வீதம் தண்டப்பணம் விதிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டதுடன் ஒருவர் இரண்டாவது தடவை இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டமைக்காக 2 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 20.02.2025 கைதுசெய்யப்பட்ட நான்கு மீனவர்களும் முதல் குற்றத்துக்காக 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையுடன் நபருக்கு தலா இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வீதம் தண்டப்பணம் விதிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் நேற்று முன் தினம் மன்னார் தாழ்வுபாடு பகுதியில் கைதுசெய்யப்பட்ட 14 மீனவர்களையும் எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments