மணிமேகலை CWC
குக் வித் கோமாளி சீசன் 5ல் இருந்து மணிமேகலை வெளியேறிய விஷயம் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதற்கு காரணம் பிரியங்கா தான் என்ற தகவல் வெளிவந்தபின் இன்னும் பெரிதாக ஆனது.
இதுகுறித்து மணிமேகலை தரப்பில் சிலரும், பிரியங்கா தரப்பில் சிலரும் பேசி வந்தனர். பிரியங்கா மீது எந்த தவறும் இல்லை என ஒரு பக்கம் கூற, மறுபக்கம் பிரியன்காவால் தான் மணிமேகலை வெளியேறியுள்ளார், இதற்குமுன் இன்னும் சில தொகுப்பாளர்களும் வெளியேறியுள்ளனர் என கூறி வந்தனர்.
இந்த நிலையில், நேற்று நடைபெற்ற குக் வித் கோமாளி சீசன் 5ன் பைனல் போட்டியில் டைட்டிலை வென்றார் பிரியங்கா. பலரும் தங்களது வாழ்த்துக்களை பிரியங்காவிற்கு தெரிவித்து வருகிறார்கள்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிந்ததை தொடர்ந்து வெளிநாட்டிற்கு பயணம் சென்றுள்ளார் பிரியங்கா. அங்கிருந்து எடுத்த சில புகைப்படங்களை கூட தனது இன்ஸ்டாராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.
பதிவு
இப்படியிருக்க மணிமேகலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் கட்டிவரும் பண்ணை வீட்டின் புகைப்படத்தை வெளியிட்டு, “இந்த இடம் தான் தனக்கு மகிழ்ச்சியும், சந்தோஷமும் தருகிறது” என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
இதோ நீங்களே பாருங்க..