Friday, December 6, 2024
Homeசினிமாஇந்த கெட்ட பழக்கத்தை விட்டுவிடுங்க.. பிரபல நடிகருக்கு அட்வைஸ் செய்த அஜித்

இந்த கெட்ட பழக்கத்தை விட்டுவிடுங்க.. பிரபல நடிகருக்கு அட்வைஸ் செய்த அஜித்


அஜித்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் சில நாட்கள் படப்பிடிப்பு மட்டும் இன்னும் மீதமுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த இரண்டு படத்திலும் அஜித்துக்கு ஜோடியாக முன்னணி நடிகை த்ரிஷா நடித்து வருகிறார்.

அஜித்துடன் இணைந்து நடித்த பலரும் அவரை பற்றி புகழ்ந்து பேசியிருப்பதை நாம் பார்த்து இருக்கிறோம். அந்த வகையில் பிரபல நடிகர் ரோபோ ஷங்கர், அஜித்துடன் இணைந்து நடித்தபோது நடந்த சம்பவம் ஒன்றை நினைவு கூர்ந்து பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

அஜித் கொடுத்த அட்வைஸ்

இதில், “ஒரு முறை என்னிடம் தம் அடிக்க போறீங்களா என அஜித் கேட்டார். ஆம் என்றேன், அதற்கு அவர் அந்த தம்-ஐ என்னிடம் கொஞ்சம் குடுங்க என கேட்டார். அப்போது அவருடன் இருந்த உதவியாளர் ஒருவர், ‘சார் மேடமுக்கு தெரிஞ்சா பிரச்சனை ஆகிடும், நீங்க இத நிறுத்தி 8 வருடங்கள் ஆகிவிட்டது’ என கூறினார். அதற்கு அஜித் சார் ‘அடிக்கலங்க அத கொண்டு வாங்க’ என சொன்னார். அந்த தம்-ஐ என்னிடம் இருந்து வாங்கி பார்த்துக்கொண்டே இருந்தார். ‘எப்படியெல்லாம் சிகரெட் பிடித்துக்கொண்டு இருந்தேன் தெரியுமா’ என அஜித் கூறினார்”.

இந்த கெட்ட பழக்கத்தை விட்டுவிடுங்க.. பிரபல நடிகருக்கு அட்வைஸ் செய்த அஜித் | Ajith Advised To Give Up Cigarette Habit

“அந்த சிகரெட்டை அப்படியே அவரிடம் இருந்து வாங்கி, அதனை பத்திரமாக வைத்திருக்கிறேன். அதன்பின் தான் அஜித் சார் சொன்னார், நான் சிகரெட் பிடிப்பதை நிறுத்தி 8 வருடங்கள் ஆகிவிட்டது. கொஞ்சம் கொஞ்சமாக நீங்களும் இதை விட்டுவிடுங்கள் ஷங்கர்” என அஜித் கூறியதாக ரோபோ ஷங்கர் அந்த பேட்டியில் கூறியுள்ளார். 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments