Thursday, February 6, 2025
Homeசினிமாஇந்த தண்ணீர்கள் நான் குளிக்க மாட்டேன்! படப்பிடிப்பில் அடம்பிடித்த நடிகை மீரா சோப்ரா

இந்த தண்ணீர்கள் நான் குளிக்க மாட்டேன்! படப்பிடிப்பில் அடம்பிடித்த நடிகை மீரா சோப்ரா


மீரா சோப்ரா

திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் மீரா சோப்ரா. இவர் தமிழில் மருதமலை, லீ, அன்பே ஆருயிரே உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் சமீபத்தில் தான் இவருக்கு திருமணம் நடைபெற்றது. 41 வயதாகும் மீரா சோப்ரா தனது நீண்ட நாள் காதலரை கரம்பிடித்தார்.



இந்நிலையில், அவர் தமிழ் சினிமாவில் பிசியாக நடித்த போது செய்த கலாட்டா குறித்து தகவல் ஒன்று பரவலாக பேசப்பட்டு வருகிறது.

அடம்பிடித்த மீரா சோப்ரா


அதன்படி, கடந்த 2006ஆம் ஆண்டு பிரஷாந்த் நடிப்பில் வெளிவந்த ஜான்பவான் திரைப்படத்தில் நடித்தபோது, குற்றால அருவியில் அவர் குளிக்கும் படியான காட்சி ஒன்றை எடுக்க முடிவு செய்துள்ளனர்.

அதற்காக டேங்க் ஒன்றில் தண்ணீரை முழுவதுமாக நிரப்பி மீரா சோப்ராவை நடிக்க அழைத்துள்ளனர்.

அங்கு வந்து பார்த்துவிட்டு இந்த தண்ணீர்கள் நான் குளிக்க மாட்டேன், எனக்கு மினரல் வாட்டர் தான் வேண்டும் என கேட்டு ஒரே அடம்பிடித்துள்ளாராம் நடிகை மீரா சோப்ரா.

இந்த தண்ணீர்கள் நான் குளிக்க மாட்டேன்! படப்பிடிப்பில் அடம்பிடித்த நடிகை மீரா சோப்ரா | Meera Chopra Asked Mineral Water For Bath Shooting

12 ஆயிரம் லிட்டர் தண்ணீர் பிடிக்கும் இந்த டேங்கில் எப்படி மினரல் வாட்டரை நிரப்புவது என இயக்குனர் கடுப்பாகியுள்ளார். பின் இந்த தகவலை தயாரிப்பாளர் காதுக்கும் எடுத்து சென்றுள்ளார். அவர் அதெல்லாம் பண்ண முடியாது என சொல்ல, உடனடியாக அங்கு இருந்து கோபத்துடன் கிளம்பிவிட்டாராம் நடிகை மீரா சோப்ரா.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments