வைரல் புகைப்படம்
திரையுலகில் பிரபலமாக இருக்கும் நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.
அந்த வகையில் தற்போது பான் இந்தியா ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவரின் சிறு வயது புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் யார் என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
பிரபாஸ்
அவர் வேறு யாருமில்லை தெலுங்கில் ஹீரோவாக அறிமுகமாகி, இன்று உலகளவில் பிரபலமாகியுள்ள நடிகர் பிரபாஸ் தான். ஆம், நடிகர் பிரபாஸின் சிறு வயது புகைப்படம் தான் தற்போது ரசிகர்களிடையே படுவைரலாகி வருகிறது.
பிரபாஸ் நடிப்பில் கடைசியாக வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படம் கல்கி. இப்படம் ரூ. 1100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அடுத்ததாக ராஜா சாப் திரைப்படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார் பிரபாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.