வைரல் புகைப்படம்
திரையுலகில் உள்ள நடிகர், நடிகைகளின் அன்ஸீன் புகைப்படங்கள் அல்லது சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் டாப் நட்சத்திரமாக இருக்கும் நடிகர் ஒருவரின் சிறு வயது புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் இருப்பது யார் என கேட்டு பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இவர் தான்
அவர் வேறு யாருமில்லை நடிகர் தனுஷ் தான். ஆம், நடிகர் தனுஷ் தனது சிறு வயதில் தன்னுடைய சகோதரிகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது.
ராயன் படத்தின் மூலம் மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளார் நடிகர் தனுஷின் நடிப்பில் அடுத்ததாக குபேரா திரைப்படம் வெளிவரவுள்ளது. இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.