சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது நட்சத்திரங்களின் புகைப்படங்கள் வெளிவந்து இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில், தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் தற்போது மாஸ் காட்டி வரும் நடிகரின் புகைப்படம் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
இவர் சமீபத்தில் நடித்து வெளிவந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனால் தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்று சினிமாவில் ஜொலித்து கொண்டு இருக்கிறார்.
ஆனால், இவர் நடிப்பில் வெளிவந்த முதல் படம் நல்ல வரவேற்பு பெறாமல் பல கேலி கிண்டலுக்கு ஆளானார். அதன் பிறகு, சிறிது காலம் சினிமாவை விட்டு விலகி இருந்த இவர் ஒரு மாஸான கம்பேக் கொடுத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
இவர் தானா
ஹீரோவாக தான் நடிப்பேன் என்று சொல்லாமல் குணச்சித்திர வேடங்கள், வில்லன், என அனைத்து கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்து தற்போது மிகவும் பிரபலமான நடிகராக சினிமாவில் வலம் வரும் இவர் வேறு யாரும் இல்லை நடிகர் பகத் பாசில் தான்.
பிரபல நடிகை நஸ்ரியாவின் கணவரான இவர் தமிழில், சூப்பர் டீலக்ஸ் , விக்ரம், மாமன்னன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
தற்போது இவர் ரஜினிகாந்த் நடிப்பில் வரும் அக்டோபர் 6 – ம் தேதி வெளியாகும் வேட்டையன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடைய சிறு வயது புகைப்படம் தான் வைரலாகி வருகிறது.