வைரல் புகைப்படம்
பாலிவுட் சினிமாவில் முக்கிய நாயகியாக இருப்பவரின் சிறு வயது புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. வாரிசு நடிகையான இவருடைய சொத்து மதிப்பு ரூ. 1000 கோடியை எட்டுகிறது என சொல்லப்படுகிறது.
ஜான்வி கபூர்
அவர் வேறு யாருமில்லை இளைஞர்களின் மனதை கவர்ந்த ஸ்டார் ஹீரோயின் நடிகை ஜான்வி கபூர் தான்.
ஆம். பாலிவுட் திரையுலகில் முக்கிய கதாநாயகிகளில் ஒருவரான நடிகை ஜான்வி கபூரின் சிறு வயது புகைப்படம் தான் வைரலாகி வருகிறது. இவர் தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஆவார்.
இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த Mr. & Mrs. Mahi திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தெலுங்கில் உருவாகி வரும் தேவாரா திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக அறிமுகமாகவுள்ளார்.
மேலும் ராம் சரண் திரைப்படத்திலும் கதாநாயகியாக கமிட்டாகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கியுள்ளது. விரைவில் தமிழ் சினிமாவிலும் என்ட்ரி கொடுக்கவுள்ளார்.