வைரல் புகைப்படம்
திரையுலகில் பிரபலமாக இருக்கும் நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.
அந்த வகையில் தற்போது பிரபல பான் இந்தியா ஸ்டாரின் சிறு வயது புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்க்கும் பலரும் யார் இவர் என கேட்டு வருகிறார்கள்.
இவர் தான்
அவர் வேறு யாருமில்லை நடிகர் யாஷ் தான். ஆம், கே.ஜி.எப் என்கிற படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் திரும்பிய பார்க்க வைத்த ஹீரோ யாஷின் சிறு வயது புகைப்படம் தான் இது.
கே.ஜி.எப் 2 திரைப்படம் உலகளவில் ரூ. 1250 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கீது மோகன்தாஸ் இயக்கத்தில் டாக்சிக் எனும் திரைப்படத்தில் யாஷ் நடித்து வருகிறார்.
[C2EWF ]
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இப்படத்தில் யாஷ் உடன் நயன்தாரா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.