சிறுவயது புகைப்படம்
திரையுலகில் அவ்வப்போது நட்சத்திரங்களின் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றது. சில புகைப்படங்களை பார்க்கும் போது யார் என்பதை எளிதாக கண்டுபிடிக்க முடியும்.
அந்த வகையில் இப்போது தென்னிந்தியா நடிகர்களின் புகைப்படம் வைரல் ஆகி வருகின்றது.
யார் தெரியுமா?
அந்த புகைப்படத்தில் இருப்பவர் வேறு யாரும் இல்லை.. இந்த புகைப்படத்தில் இருப்பது நடிகர் சூர்யாவும் அவரது தம்பி கார்த்தியும் தான்.
தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சூர்யா, ஆரம்பத்தில் பல ட்ரோல்களை சந்தித்தாலும் இப்போது இந்திய அளவில் பிரபல நடிகராக மாறியிருக்கிறார். அதுபோலவே அவருடைய தம்பியும் நடிகருமான கார்த்தி சினிமா துறையில் அவருக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.
தற்போது பெரிய பொருட் செலவில் உருவாகியுள்ள கங்குவா படத்தில் சூர்யாவுடன் கார்த்தியும் இணைந்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. இந்த விஷயம் ரசிகர் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.