விஜய்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் தற்போது தளபதி 69 படம் உருவாகி வருகிறது. இதுவே தனது கடைசி படம் என அறிவித்துள்ளார்.
சமீபத்தில் தனது தவெக கட்சியின் மாநாட்டையும் பிரமாண்டமான முறையில் நடத்தி முடித்தார். இணையத்தில் அவ்வப்போது திரையுலக பிரபலங்களின் புகைப்படங்கள் வைரலாகும்.
வைரல் புகைப்படம்
அந்த வகையில் விஜய்யின் மடியில் அமர்ந்து இருக்கும் சிறுவனின் புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
விஜய்யின் பக்கத்தில் அவருடைய தாய் ஷோபா சந்திரசேகர் இருக்க, அவருடைய மடியில் அமர்ந்து இருக்கும் சிறுவன் வேறு யாரும் இல்லை நடிகர் விக்ராந்த் தான். ஆம், விஜய்யின் தம்பியும் பிரபல நடிகருமான விக்ராந்தின் சிறு வயது புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது.