Saturday, December 7, 2024
Homeசினிமாஇந்த வயதிலும் பிட்டாக இருக்க நடிகர் விக்ரம் எடுக்கும் டயட், உடற்பயிற்சி என்ன தெரியுமா?

இந்த வயதிலும் பிட்டாக இருக்க நடிகர் விக்ரம் எடுக்கும் டயட், உடற்பயிற்சி என்ன தெரியுமா?


நடிகர் விக்ரம்

நடிகர் விக்ரம், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கிடைத்த நடிப்பு அரக்கன்.

ஒரு கதாபாத்திரத்திற்காக எந்த அளவிற்கும் சென்று நடிக்கக்கூடிய பிரபலம் இவர். சேது என்ற படத்தில் சியான் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததால் சியான் விக்ரம் என்றே இவருக்கு பெயர் வந்துவிட்டது.

அடுத்து சியான் விக்ரம் நடிப்பில் தங்கலான் படம் வெளியாக உள்ளது, படத்தின் டிரைலர் சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது. 58 வயதாகும் விக்ரம் இந்த வயதிலும் இளமை தோற்றத்தில் காணப்படுகிறார்.

அதற்கு என்ன காரணம், அவர் பாலோ செய்யும் டயட் குறித்து சில தகவல்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.


பிரபலத்தின் டயட்


2015ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் நடித்த ஐ படத்திற்காக தனது உடல் எடையை சுத்தமாக குறைத்து ஆளே மாறியிருந்தார்.

அவர் அதை எப்படி செய்தார் தெரியுமா? நடிகர் விக்ரம் உடல் எடையை குறைக்கும் சமயத்தில் ப்ரோட்டின் டயட் இருந்தாராம். அதாவது அவர் முட்டை, சிக்கன், நட்ஸ் வகை உணவுகள் போன்றவையை மட்டும் அவர் எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த வயதிலும் பிட்டாக இருக்க நடிகர் விக்ரம் எடுக்கும் டயட், உடற்பயிற்சி என்ன தெரியுமா? | Actor Vikram Diet And Exercise Plan In This Age

20ல் இருந்து 57 கிராம் வரை உள்ள கார்போஹைட்ரேட் உணவுகளை மட்டும் எடுத்துக்கொள்வாராம். உடலில் 80 முதல் 240 கலோரிகள் வரை மட்டுமே சேருமாம், இதனால் உடல் எடை வேகமாக குறையுமாம்.

அதோடு தினரி கார்டியோ உடற்பயிற்சி, நீச்சல் பயிற்சி, சைக்ளிங், ஓடுவது போன்றவற்றையும் செய்திருக்கிறார்.

ஒரே மாதிரி டயட் இருந்தார் போர் அடிக்கும் என்று ப்ரோட்டின் ஷேக் கேக்ஸ், பேக் செய்யப்பட்ட குக்கீஸ், சியா விதைகள் மற்றும் குயினாவோ உள்ளிட்ட உணவுகளை சாப்பிடுவாராம். 

இந்த வயதிலும் பிட்டாக இருக்க நடிகர் விக்ரம் எடுக்கும் டயட், உடற்பயிற்சி என்ன தெரியுமா? | Actor Vikram Diet And Exercise Plan In This Age



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments