குக் வித் கோமாளி
குக் வித் கோமாளி, மக்களை சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக தொடங்கப்பட்டு இப்போது வருத்தப்பட வைக்கும் ஒரு ஷோவாக மாறிவிட்டது.
4 சீசன்கள் வரை கோமாளியாக இருந்து வந்த மணிமேகலை 5வது சீசனில் தொகுப்பாளராக களமிறங்கினார்.
அவருக்கு மிகவும் பிடித்த இந்த வேலையை அவர் ரசித்து செய்ய பின் அதில் பிரச்சனையும் வந்தது, இதனால் ஷோவை விட்டு வெளியேறிவிட்டார்.
அதன்பின் அவர் வெளியிட்ட ஒரு வீடியோ இப்போது பெரிய விஷயமாக பேசப்பட்டு வருகிறது.
தொகுப்பாளர்
இன்னும் 5வது சீசன் முடிவுக்கு வரவில்லை, சில எபிசோடுகள் ஒளிபரப்பானதும் முடிவை எட்டுகிறது.
அதற்குள் மணிமேகலை நிகழ்ச்சியை விட்டு வெளியேறிவிட்டார்.
தற்போது அவருக்கு பதில் 5வது சீசனில் தொகுப்பாளராக புகழ் மற்றும் விடிவி கணேஷ், ரக்ஷ்னுடன் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.
ஆனால் இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் சிலர் ரக்ஷனை வைத்து மட்டுமே கூட நிகழ்ச்சியை முடித்திருக்கலாமே என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.