Tuesday, April 22, 2025
Homeசினிமாஇந்த வாரம் OTT-ல் வெளிவரும் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ

இந்த வாரம் OTT-ல் வெளிவரும் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ


OTT

திரையரங்கை தாண்டி OTT-ல் படம் பார்க்கும் கலாச்சாரம் பெருகி வருகிறது. படங்கள், வெப் தொடர்கள் என மக்கள் OTT பக்கம் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்கள்.



ஓவ்வொரு வாரத்தின் வெள்ளிக்கிழமை எப்படி திரையரங்கில் படம் வெளியாகிறதோ, அதே போல் ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும் OTT-ல் புதிய படங்களை பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.

இந்த நிலையில், இந்த வாரம் தீபாவளி ஸ்பெஷலாக OTT-ல் வெளிவரும் படங்கள் பற்றி தான் இந்த பதிவில் நாம் காணவிருக்கிறோம்.

இந்த வாரம் வெளிவரும் திரைப்படங்கள்



அந்தகன்


பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியான அந்தூதன் படத்தை ரீமேக் செய்து நடிகர் பிரசாந்த நடிப்பில் வெளியான படம் அந்தகன். இப்படத்தில் பிரஷாந்த் உடன் இணைந்து சிம்ரன், சமுத்திரக்கனி, பிரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் நாளை 31ஆம் தேதி பிரைம் OTT தளத்தில் வெளியாக உள்ளது.



லப்பர் பந்து



2024ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவின் சென்சேஷனல் ஹிட் திரைப்படமாக மாறியுள்ளது லப்பர் பந்து. அறிமுக இயக்குனரான தமிழரசன் பச்சமுத்து இப்படத்தை இயக்கியிருந்த நிலையில், அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் நாளை 31ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹட்ஸ்டார் மற்றும் சிம்பிலி சவுத் ஆகிய OTT தளங்களில் வெளியாகிறது.

இந்த வாரம் OTT-ல் வெளிவரும் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ | This Week Ott Release List

தங்கலான்


விக்ரம் – பா. ரஞ்சித் கூட்டணியில் உருவாகி வெற்றியடைந்த திரைப்படம் தங்கலான். மாளவிகா மோகனன், பார்வதி ஆகியோர் நடித்திருந்த இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். சில காரணங்களால் இப்படத்தின் OTT ரிலீஸ் தள்ளிப்போய் கொண்டே இருந்த நிலையில், தற்போது தங்கலான் படம் நாளை 31ஆம் தேதி நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் இப்படம் வெளியாகிறது.

இந்த வாரம் OTT-ல் வெளிவரும் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ | This Week Ott Release List



ஜோக்கர்: போலி எ டியூக்ஸ்



பிரபல ஹாலிவுட் இயக்குனர் டூட் பிலிப்ஸ் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த திரைப்படம் ஜோக்கர்: ஃபோலி எ டியூக்ஸ். இப்படத்தில் ஜாக்குவான் பீனிக்ஸ், லேடி காகா நடித்திருந்தனர். இப்படம் நேற்று 29ஆம் தேதி பிரைம் OTT தளத்தில் வெளியாகி உள்ளது.

இந்த வாரம் OTT-ல் வெளிவரும் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ | This Week Ott Release List


அஞ்சாமை


நீட் தேர்வினால் ஏற்படும் பிரச்சினைகள் பற்றி பேசிய திரைப்படம் அஞ்சாமை. இப்படத்தை எஸ்.பி. சுப்புராமன் இயக்க வித்தார்த், வாணி போஜன் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் நேற்று 29ஆம் தேதி ஆஹா தமிழ் OTT தளத்தில் வெளியாகியுள்ளது.

இந்த வாரம் OTT-ல் வெளிவரும் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ | This Week Ott Release List

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments