Sunday, November 10, 2024
Homeசினிமாஇந்த விஷயத்திற்காக நடிகர் அஜித் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.. பத்திரிகையாளர் சபிதா ஜோசப் பேட்டி

இந்த விஷயத்திற்காக நடிகர் அஜித் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.. பத்திரிகையாளர் சபிதா ஜோசப் பேட்டி


அஜித்

நடிகர் அஜித் குமார் பல ஆண்டுகளை கடந்து ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நாயகனாக இருந்து வருகிறார். தற்போது இவர் விடாமுயற்சி, குட் பேட் அக்லி போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இதில் விடாமுயற்சி படம் இந்த வருடம் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் வெளிவர உள்ளது என கூறப்படுகிறது. அடுத்து குட் பேட் அக்லி படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீசாகவுள்ளது.

ஷாலினி – அஜித்

இந்த நிலையில் சினிமா விமர்சகரும் பத்திரிகையாளரான சபிதா ஜோசப், நடிகர் அஜித் மற்றும் அவர் மனைவி ஷாலினி குறித்தும் ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.

அதில், அஜித் போல் ஒரு கணவன் கிடைக்க ஷாலினி மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றும் அதேபோல், ஷாலினி போல் மனைவி கிடைக்க அஜித் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.



அதுமட்டுமில்லாமல், நடிகர் அஜித் ஒரு நல்ல மனிதர் என்றும், தனது ரசிகர்களை தன் குடும்பமாக நினைப்பவர் என்றும் ரசிகர்களின் நலனில் மிகுந்த அக்கறையுடன் பார்த்து கொள்ளும் குணம் கொண்டவர் எனவும் இதற்காக தன் ரசிகர்கள் தன்னை தல என்று அழைக்கக்கூடாது என்றும் அஜித் கூறியதை சபிதா ஜோசப் கூறியுள்ளார்.

இந்த விஷயத்திற்காக நடிகர் அஜித் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.. பத்திரிகையாளர் சபிதா ஜோசப் பேட்டி | Journalist Sabitha Joseph About Ajith And Shalini

இதை தொடர்ந்து, நடிகை ஷாலினிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதை குறித்தும் பேசியுள்ளார். அதில் ஷாலினி மருத்துவமனையில் இருந்தபோது அஜித் விடாமுயற்சி ஷூட்டிங்கில் இருந்ததாகவும். தன் மனைவி சிகிச்சையில் இருக்கும்போது சில தினங்கள் இடைவெளி எடுத்து கொண்டு தன் மனைவியை கவனித்ததாகவும் கூறினார்.


மேலும், நடிகை ஷாலினிக்கு கர்ப்பப்பையில் பிரச்சினை இருந்ததால் இவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதையும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments