வாணி ராணி
சன் தொலைக்காட்சியுடன் கூட்டணி அமைத்து ராதிகா சரத்குமார் நிறைய தொடர்கள் தனது ராடான் நிறுவனத்தின் மூலம் தயாரித்து நடித்தும் இருக்கிறார்.
அப்படி அவர் தயாரித்து, நடித்த தொடர்களில் ஒன்று வாணி ராணி. கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த தொடர் 2013ம் ஆண்டு வரை 1743 எபிசோடுகள் வரை வெற்றிகரமாக ஒளிபரப்பாகியது.
இந்த தொடரில் டிம்பிள் கதாபாத்திரத்தில் நடித்து சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் தான் நீலிமா ராணி.
எமோஷ்னல் வீடியோ
இவர் தனது இன்ஸ்டாவில் ஒரு எமோஷ்னல் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், 7 வருடங்களுக்கு பிறகு வாணி ராணி சீரியல் படப்பிடிப்பு நடந்த வீட்டிற்கு வானத்தைப் போல தொடர் ஷுட்டிங்கிற்காக வந்துள்ளேன். வாணி ராணி டிம்பிள் வீடு எவ்வளவு அழகாக தயாராகிக் கொண்டிருப்பதை பாருங்கள்.
இந்த வீட்டை நான் மிகவும் ஆச்சரியமாக இருக்கிறேன். இதை பார்க்கும் போது எனக்கு பழைய ஞாபகங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த இடத்தில் நிறைய மறக்க முடியாத சம்பவங்கள் நடந்துள்ளன, இந்த வீடு தற்போது மாறப்போகிறது.
அதற்கு முன்பு இந்த வீட்டிற்கு வந்து வீடியோ எடுத்து உங்களுக்கு பகிர்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என எமோஷ்னல் ஆகியுள்ளார். இதோ வீடியோ,