Wednesday, March 26, 2025
Homeசினிமாஇனியா காதலுக்கு எண்டு கார்டு போட்ட பாக்யா.. ஆனால் ஈஸ்வரியின் மோசமான செயல்

இனியா காதலுக்கு எண்டு கார்டு போட்ட பாக்யா.. ஆனால் ஈஸ்வரியின் மோசமான செயல்


பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது இனியாவின் காதல் விவகாரம் தான் பெரிய பிரச்சனையாக வீட்டில் மாறி இருக்கிறது.

வேலைக்காரியாக வீட்டில் இருக்கும் செல்வியின் மகனை இனியா காதலிப்பதற்கு ஒட்டுமொத்த குடும்பமும் கடும் எதிர்ப்பு தெரிவித்து இனியா உடன் பேசாமல் இருக்கின்றனர். எழில் மட்டும் இனியாவுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் பேசுகிறார்.

செழியன் தகாத வார்த்தைகளில் இனியாவை பேச, பாக்யா கோபமாக வந்து அவனை திட்டுகிறார்.

சத்தியம் வாங்கிய பாக்யா

இனியா இப்படி 20 வயதிலேயே கெரியர் பற்றி கவனம் செலுத்தாமல் காதல் பக்கம் சென்றுவிட்டதை பற்றி பாக்யா கூறி புரிய வைக்கிறார். அதன் பின் அந்த பையன் உடன் பேச கூடாது என சத்தியமும் வாங்குகிறார். அதன் மூலமாக இனியா காதல் சர்ச்சைக்கு எண்டு கார்டு அவர் போடுகிறார்.

இனியா காதலுக்கு எண்டு கார்டு போட்ட பாக்யா.. ஆனால் ஈஸ்வரியின் மோசமான செயல் | Baakiyalakshmi Serial Today Iniya Promises To Mom

அதன் பின் மறுநாள் காலை பாக்யா தனது ஹோட்டலுக்கு வேலைகளை கவனிக்க செல்கிறார். ஆனால் ஈஸ்வரி அவரை தடுத்து வம்பிழுக்கிறார். நீ வீட்டில் இருந்து குழந்தைகளை சரியாக பார்த்துக்கொள்ளாதது தான் இதெல்லாம் நடக்க காரணம் என சொல்லி திட்டுகிறார்.

ஹோட்டலை இழுத்து மூடிவிட்டு வீட்டிலேயே இரு என்றும் சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவு பெற்றது. பாக்யா அவருக்கு என்ன பதிலடி கொடுக்க போகிறார் என்பதை நாளைய எபிசோடில் பார்க்கலாம். 

இனியா காதலுக்கு எண்டு கார்டு போட்ட பாக்யா.. ஆனால் ஈஸ்வரியின் மோசமான செயல் | Baakiyalakshmi Serial Today Iniya Promises To Mom

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments