சன் டிவி
ஒவ்வொரு தொலைக்காட்சிக்கும் ஒரு ஸ்பெஷல் உள்ளது, அப்படி சன் டிவி எடுத்துக் கொண்டால் சீரியல்கள் தான்.
அதில் அவர்களின் டிஆர்பியை அடித்துக்கொள்ள இன்னும் வேறு எந்த தொலைக்காட்சியும் வரவில்லை.
காலை 10 மணிக்கு ஆரம்பித்து விதவிதமான கதைக்களத்தை கொண்ட தொடர்கள் இரவு 10 வரை ஒளிபரப்பாகி வருகிறது.
இதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் தான் டிஆர்பி கிங்காக உள்ளது.
முடியும் தொடர்
இந்த நிலையில் சமீபத்தில் சன் தொலைக்காட்சியில் ஹிட்டாக ஓடி வந்த இனியா தொடர் முடிவை நெருங்கியது. தற்போது டிஆர்பியில் டாப் 5ல் வந்துகொண்டிருந்த ஒரு சீரியலின் கிளைமேக்ஸ் குறித்த அறிவிப்பு வந்துள்ளது.
அது வேறு எந்த தொடரும் இல்லை, கேப்ரியல்லா நடித்துவரும் சுந்தரி சீரியல் தானாம்.
இந்த தொடர் இம்மாத இறுதி அல்லது அடுத்த வார முதலில் முடிவுக்கு வந்துவிடும் என கூறப்படுகிறது.