Sunday, September 8, 2024
Homeசினிமாஇனி நடக்கவே முடியாது.. கால் வெட்டி எடுக்க சொன்ன டாக்டர்! - சியான் விக்ரம் வாழ்க்கையில்...

இனி நடக்கவே முடியாது.. கால் வெட்டி எடுக்க சொன்ன டாக்டர்! – சியான் விக்ரம் வாழ்க்கையில் நடந்த சோகம்


விக்ரம் நடித்து உள்ள தங்கலான் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. அதில் மேடையில் பேசிய விக்ரம் தனது வாழ்க்கையில் சந்தித்த சோகமான சம்பவம் பற்றி பேசி இருக்கிறார்.

“நான் இப்போது இருப்பது போல தான் சின்ன வயதிலும் இருந்தேன். படிக்கவே மாட்டேன்.  நான் 8ம் வகுப்பு படிக்கும்வரை ஸ்கூலில் முதல் மூன்று ரேங்க் தான் எடுப்பேன். ஆனால் நடிக்க ஆசை வந்து அதில் சென்றபிறகு கடைசி 3 ரேங்க்களில் ஒன்றை தான் வாங்குவேன்.”

“அந்த அளவுக்கு நடிப்பின் மீது வெறியாக இருந்தேன். நாடகம் நடிக்கும்போது பல விதமான ரோல்களை கேட்டு வாங்கி நடிப்பேன்.”

விபத்து

சினிமாவில் சேர்ந்து ஏதாவது சாதிக்கவேண்டும் என்கிற வெறி காலேஜ் படிக்கும்போது உச்சத்தில் இருந்தது. அப்போது ஐஐடியில் ஒரு நாடகத்தில் நடித்து சிறந்த நடிகர் விருது வாங்கினேன். அன்று விபத்தில் சிக்கி என் கால் உடைந்துவிட்டது.

கால் வெட்ட வேண்டும் என கூறினார்கள். மூன்று வருடம் ஹாஸ்ப்பிடல் பெட்டில் கிடந்தேன். 23 சர்ஜரி நடந்தது. அதன் பிறகு ஒரு வருடம் crutches பிடித்துக்கொண்டு தான் நடந்தேன்.


இனி நடக்கவே முடியாது, வெட்ட வேண்டும் என கூறிய காலை காப்பாற்றியதே பெரிய விஷயம் என டாக்டர் கூறினார். என் அம்மா அழுதுகொண்டு இருந்தார். ஆனால் நான் நடப்பேன் என நம்பிக்கையுடன் இருந்தேன்.

சினிமாவில் நடிக்க வேண்டும் என கிறுக்கன் போல இருந்தேன். பெரிய ரோல் வேண்டாம், ஒரே ஒரு சீனில் வந்தால் கூட போதும் என வெறியுடன் தேடினேன்.

இனி நடக்கவே முடியாது.. கால் வெட்டி எடுக்க சொன்ன டாக்டர்! - சியான் விக்ரம் வாழ்க்கையில் நடந்த சோகம் | Chiyaan Vikram Talks About Accident And Struggles


அந்த போராட்டம் இன்னும் 10 வருடங்கள் தொடர்ந்தது. அந்த நேரத்தில் நான் வேலைக்கும் போவேன். ஒரு குச்சியை பிடித்துக்கொண்டு 750 ரூபாய் மாத சம்பளத்திற்கு சென்று வருவேன்.


எனக்கு பட வாய்ப்புகள் வந்த பிறகு என்னை விமர்சித்தவர்கள் கொஞ்சம் அமைதி ஆனார்கள். 10 வருடம் போனது. மீண்டும் ஆரம்பித்துவிட்டார்கள். நடிக்க வாய்ப்பு எல்லாம் வராது விட்டுடு, வேற வேலை பாரு என நண்பர்கள் கூட கூற தொடங்கினார்கள்.

என் நண்பர்கள் உயர்ந்து கொண்டிருந்தார்கள். வளராமல் ஒரே இடத்தில் இருக்கும் என்னை பரிதாபமாக பார்ப்பார்கள். ஆனாலும் நான் உறுதியாக இருந்தேன். அன்று நான் விட்டிருந்தால் இப்போது இந்த நிலையில் இருக்க முடியாது.

நான் இப்போதும் நினைப்பேன். வெற்றி எனக்கு வரவே இல்லை என்றால் என்னை செய்திருப்பேன் என யோசிப்பேன். இப்போதும் சினிமாவில் நடிக்க நான் முயற்சி செய்து கொண்டு தான் இருந்திருப்பேன். அந்த அளவுக்கு நான் சினிமாவை நேசிக்கிறேன்.

இவ்வாறு விக்ரம் மிகவும் உருக்கமாக பேசி இருக்கிறார். 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments