விஜய்யின் கோட் படம் ரிலீஸ் ஆக இன்னும் சில வாரங்கள் மட்டுமே இருக்கிறது. அதனால் விஜய் ரசிகர்கள் கோட் ட்ரைலர் எப்போது வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
தொடர்ந்து இது பற்றி ட்விட்டரில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில் தயாரிப்பாளர் ஏஜிஎஸ் நிறுவனத்தின் அர்ச்சனா கல்பாத்தி ஒரு அப்டேட் கொடுத்து இருக்கிறார்.
இரண்டு நாள் பொறுங்க..
‘ஒரு அற்புதமான ட்ரைலரை நாங்கள் தயார் செய்து வருகிறோம். அதனால் அமைதியாக இருந்து, எங்களுக்கு இரண்டு நாட்கள் கொடுங்கள்.’
‘இது பற்றி proper அப்டேட் நாளைக்கு வரும் ‘ என அர்ச்சனா கல்பாத்தி கூறி இருக்கிறார்.
We are getting an amazing trailer ready for you. So please stay calm and give us a couple of days ❤️🤗 Will give you a proper update tomorrow #GOAT
— Archana Kalpathi (@archanakalpathi) August 12, 2024